தொடக்க நிலையில் தற்காப்பு கலைக்கு தேவைப்படும் அடிப்படை பத்து நிலைப்பாடுகள்

பகுதி 2

குங் ஃபூ கற்றுக் கொள்வதற்கு முக்கியமான பத்து அடிப்படை நிலைப்பாடுகளை கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நிலைப்பாடுகளின் பயன்கள்:

01. குங் ஃபூ பாடங்கள் கற்றுக் கொள்வதற்கு இந்த நிலைப்பாடுகள் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
02. சண்டை போடும் பொழுது குத்துவது உதைப்பது போன்ற செயல்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
03. இந்த நிலைப்பாடுகள் அனைத்தும் பலம் மற்றும் சமநிலையை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

1.HORSE STANCE
முதலில் உங்கள் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்த மாதிரி நேராக நிற்க வேண்டும். இரண்டாவதாக இடது காலை இடதுபுறமாக திறந்து நிற்க வேண்டும்.
மூன்றாவதாக உங்கள் இரு கால்களையும் சிறிதளவு முழங்காலை மடக்கி நாற்காலியில் அமர்வது போல் உட்கார வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை செய்வதால் உங்களுக்கு சரியான சமநிலை மற்றும் கால் இடுப்பு நன்றாக வலுவடையும்.

2.FORWARD STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்.
இரண்டாவதாக இடது காலை முன் நோக்கியபடி கொண்டு செல்லவும், சென்ற பிறகு முன்னோக்கி நிலைப்பாட்டில் நிற்க வேண்டும்.
மூன்றாவதாக உங்கள் இடது காலின் முழங்காலை சிறிதளவு மடக்கியபடி இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் வலது கால் கீழே இறங்கி இருக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும்.அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை செய்வதால் உங்களுக்கு சரியான சமநிலை மற்றும் கால் இடுப்பு நன்றாக வலுவடையும். அது மட்டும் இல்லாமல் இந்த நிலைப்பாடு சண்டை போடும் போது உங்களுக்கு பெரிதளவு உதவியாக இருக்கும்.

3.CAT STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்
இரண்டாவதாக உங்கள் இடதுகாலை சிறிதளவு முன்னோக்கி கொண்டு சென்று உங்கள் பாதம் தரையில் படும்படி நிற்க வேண்டும். அதே நேரத்தில் குதிங்கால் மேலே தூக்கி இருக்க வேண்டும்.
மூன்றாவதாக இடது மற்றும் வலது காலின் முழங்கால் லேசாக மடங்கி கீழே இறங்கிய நிலையில் இருக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை பயிற்சி செய்வதால் பின்னே இருக்கும் கால் மூலம் சமநிலைக்கு வந்து உங்கள் பலத்தை அதிகரிக்க முடியும். சண்டை போடும் பொழுது உங்களது முன் கால்களால் தாக்குவதற்கு இந்த நிலைப்பாடு உங்களுக்கு பெரிதளவு உதவும்.

4.CROSS STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்.
இரண்டாவதாக இடது காலை வலது காலின் பின்புறம் கொண்டு சென்று இடது காலின் பாதங்கள் தரையில் தொடும்படி இருக்க வேண்டும். அதன்பிறகு குதிங்கால் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
மூன்றாவதாக உங்கள் இரண்டு கால்உடைய முழங்கால் லேசாக மடங்கி இருக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை பயிற்சி செய்வதால் உங்களுடைய கால்கள் மற்றும் முழு உடம்பும் நன்றாக வலுவடையும் அதுமட்டும் இல்லாமல் கீழ்நோக்கி தாக்கும் முறைக்கு இந்த நிலைப்பாடு மிகவும் உதவியாக இருக்கும்.

5.CROUCH STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்.
இரண்டாவதாக வலது காலை வலது புறமாக கொண்டு சென்று முக்கோண வடிவில் நிற்கவேண்டும்.
மூன்றாவதாக வலது காலின் முழங்காலை சிறிதளவு மடக்கவும் மடக்கிய பின் மடக்கிய நிலையிலேயே நிற்க வேண்டும்.
இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை பயிற்சி செய்வதால் உங்களுடைய கால்கள் மற்றும் முழு உடம்பும் நன்றாக வலுவடையும், அதுமட்டும் இல்லாமல் சண்டை போடும் பொழுது எதிராளிகளின் கால்களை தட்டி விடுவதற்காக நன்றாக உதவும்.

6.KNEEL STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்.
இரண்டாவதாக உங்களுடைய வலது காலின் குதிங்காலை மேல் நோக்கி தூக்க வேண்டும்.
மூன்றாவதாக உங்களுடைய இரண்டு கால்களின் முழங்கால்களை சிறிதளவு மடக்கிய நிலையில் இருக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை பயிற்சி செய்வதால் முழங்காலுக்கு கீழ் நன்றாக பலமடையும் மற்றும் உங்களுடைய முழங்காலுக்குக் கீழ் சமநிலையை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

7.ONE FOOT STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்.
இரண்டாவதாக வலது காலை மேலே தூக்கி முழங்கால் மடக்கி இருக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை பயிற்சி செய்வதால் உங்கள் ஒருகால் சமநிலையை நன்றாக பலமடைய செய்ய முடியும். அதுமட்டும் இல்லாமல் சண்டை போடும்போது காலினால் தாக்கும் முறைக்கு நன்றாக உதவியாக இருக்கும்.

8.X STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்.
இரண்டாவதாக உங்கள் வலது காலை இடது காலின் பின்புறம் கொண்டு செல்ல வேண்டும் . எக்ஸ் வடிவில் கால்கள் இருக்க வேண்டும்.
மூன்றாவதாக உங்களுடைய இரண்டு கால்களின் முழங்கால்களையும் சிறிதளவு மடக்கி கீழே இறங்க வேண்டும்.
நான்காவதாக இந்த நிலையில் இருக்கும் பொழுது உங்களுடைய இரண்டு கால்களும் ஒன்றாக ஒட்டிய நிலையில் இருக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை பயிற்சி செய்வதால் உங்களுடைய கால்கள் மற்றும் முழு உடம்பும் நன்றாக வலுவடையும்.

9.TIGER STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்.
இரண்டாவதாக உங்கள் இடது காலை முன் நோக்கியபடி கொண்டு செல்ல வேண்டும் .
மூன்றாவதாக பின்னே இருக்கும் வலதுகாலின் முழங்காலை மடக்கி முழங்கால் தரையில் படும்படி இருக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை பயிற்சி செய்வதால் கீழே குனிந்தபடி தாக்குதல் முறைக்கு இது பயனளிக்கும்.

10.ONE LEG SITTING STANCE
முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும்.
இரண்டாவதாக உங்கள் வலது காலை தூக்கி இடது கால் மேல் வைக்க வேண்டும்.
மூன்றாவதாக இடது காலின் முழங்காலை மடக்கி நாற்காலியில் இருப்பது போல் இருக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை இரண்டு புறமும் செய்வது நல்லது.

இந்த நிலைப்பாட்டை பயிற்சி செய்வதால் உங்களுடைய ஒரு காலின் சிறந்த சமநிலையை இந்த நிலைப்பாடு அதிகரிக்கும்.

Comments