பகுதி 2 குங் ஃபூ கற்றுக் கொள்வதற்கு முக்கியமான பத்து அடிப்படை நிலைப்பாடுகளை கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாடுகளின் பயன்கள்: 01. குங் ஃபூ பாடங்கள் கற்றுக் கொள்வதற்கு இந்த நிலைப்பாடுகள் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். 02. சண்டை போடும் பொழுது குத்துவது உதைப்பது போன்ற செயல்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 03. இந்த நிலைப்பாடுகள் அனைத்தும் பலம் மற்றும் சமநிலையை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். 1.HORSE STANCE முதலில் உங்கள் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்த மாதிரி நேராக நிற்க வேண்டும். இரண்டாவதாக இடது காலை இடதுபுறமாக திறந்து நிற்க வேண்டும். மூன்றாவதாக உங்கள் இரு கால்களையும் சிறிதளவு முழங்காலை மடக்கி நாற்காலியில் அமர்வது போல் உட்கார வேண்டும். இதை செய்யும் பொழுது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் இரண்டு கைகளும் இடுப்பின் மேல் இருக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டை செய்வதால் உங்களுக்கு சரியான சமநிலை மற்றும் கால் இடுப்பு நன்றாக வலுவடையும். 2.FORWARD STANCE முதலில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நேராக நிற்க வேண்டும். இரண்டாவதாக இடது காலை ம...
Comments
Post a Comment